மகாத்மா காந்தியுடன், மோடி இருக்கும் ஓவியம் ரூ. 25 லட்சத்திற்கு ஏலம்.!

அரசியல்

மகாத்மா காந்தியுடன், மோடி இருக்கும் ஓவியம் ரூ. 25 லட்சத்திற்கு ஏலம்.!

மகாத்மா காந்தியுடன், மோடி இருக்கும் ஓவியம் ரூ. 25 லட்சத்திற்கு ஏலம்.!

பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட 2,772 பொருட்களை மத்திய கலை மற்றும் கலாசாரத்துறை சார்பில், கடந்த செப்., 14ம் தேதி முதல் மின்னணு ஏலத்தில் விற்கப்பட்டு வருகின்றன. இந்த ஏலத்தில் வரும் தொகை முழுவதும் கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பொருட்கள் அனைத்தும் டில்லியிலுள்ள தேசிய மாடர்ன் ஆர்ட் கேலரியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில், ஓவியங்கள், சிற்பங்கள், புகைப்படங்கள், அழகிய கலைப்பொருட்கள், சிலைகள், பொன்னாடைகள், இசைக் கருவிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 3ம் தேதியுடன் நிறைவுபெறுவதாக இருந்த ஏலம், மேலும், 3 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது.

இந்த நினைவுப் பரிசுகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 500ம், அதிகபட்சமாக ரூ. 2.5 லட்சமும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டன.  அதில் இந்திய தேசிய கொடியின் பின்னணியில் மகாத்மா காந்தியுடன், மோடி இருக்கும் ஓவியம் ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனது தாயாரிடம் மோடி ஆசி பெறும் படம், ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் போனது. 14 செ.மீ., உயரம் கொண்ட சுவாமி விவேகானந்தர் சிலை ரூ. 6 லட்சத்துக்கு விலை போனது.

Comments are closed.