பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பு -தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேச்சு.!
- October 25, 2019
- g-pandian
- : 804

மகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், தேவேந்திர பட்னாவிஸ், மனோகர் லால் கட்டார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இரு மாநிலங்களிலும் வெற்றியை அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். தற்போதைய சூழலில் ஆட்சியை தக்கவைப்பது கடினமான காரியமாக இருக்கும் நிலையில், ஹரியானாவிலும் வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்த பிரதமர், மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக தொடருவார் என்றார். மகாராஷ்டிராவில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முதலமைச்சர் தனது பதவிகாலத்தை முடித்துள்ளார் என்றும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்தில் அரசியல் உறுதித்தன்மை அவசியம் எனவும் பிரதமர் கூறினார்
தேவேந்திர பட்னாவிஸும் மனோகர் லால் கட்டாரும் முதல் முறையாக முதல் மந்திரிகளாக இருந்தவர்கள். அவர்களுக்கு மந்திரிகளாக இருந்த அனுபவம் இருந்தது இல்லை. இருந்தாலும், 5 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக மக்கள் அவர்கள் மீது மீண்டும் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளனர். ஐந்து ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிகழ்வு குறைவாகவே நடப்பதால், அரியானாவில் கிடைத்த வெற்றியும் மிகச்சிறப்பான வெற்றியே” இவ்வாறு அவர் பேசினார்.