தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல் : நடக்குமா நடக்காதா…?

அரசியல்

தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல் : நடக்குமா நடக்காதா…?

தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல் : நடக்குமா நடக்காதா…?

தமிழகத்தில், 2016ல் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததும், தேர்தல் நடத்த, தேதி அறிவிக்கப் பட்டது. இட ஒதுக்கீடை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.உள்ளாட்சி தேர்தலை நடத்த, நீதிமன்றம் தடை விதித்தது.அதன்பின், உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில், அக்., 31க்குள், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடுவதாக, மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில்;

உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 வார காலம் அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடைப்பது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் கிடைக்காததால் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது. இதனால் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.இதனால் உள்ளாட்சி துறையில் உள்ள ஊழல் அதிகாரிகள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

Comments are closed.