தமிழகத்தில் 1072 மேல்முறையீட்டு வழக்குகளை வருமான வரித்துறை திரும்பப் பெற்றுள்ளது..!

சமூக நலன்

தமிழகத்தில் 1072 மேல்முறையீட்டு வழக்குகளை வருமான வரித்துறை திரும்பப் பெற்றுள்ளது..!

தமிழகத்தில் 1072 மேல்முறையீட்டு வழக்குகளை வருமான வரித்துறை திரும்பப் பெற்றுள்ளது..!

தமிழ்நாடு வருமான வரித்துறை மொத்தம் 1072  மேல்முறையீட்டு வழக்குகளை திரும்பப் பெற்றுள்ளது. இவற்றில் உயர்நீதிமன்றத்தின் 716 வழக்குகளும், வருமானவரி மேல் முறையீட்டு மன்றத்தின் 356 வழக்குகளும் அடங்கும். இன்றுள்ள நிலவரப்படி மேல்முறையீட்டு மன்றத்தில் 1,565 வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் 4,187 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

வருமானவரி செலுத்துவோரின் நலன் சார்ந்த தொடர் வரிசையில், வருமானவரித்துறை சார்பில் மேல்முறையீடு செய்வதற்கான உச்சவரம்புத் தொகை அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளது.   வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வருமானவரித் துறையின் மேல் முறையீட்டுக்கான உச்சவரம்பு ரூ.20,00,000-லிருந்து ரூ.50,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் உயர்நீதிமன்றத்தில் ரூ.50,00,000-லிருந்து ரூ.1,00,00,000- யாக உயர்த்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ரூ.1,00,00,000-லிருந்து ரூ.2,00,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு உயர்வு 8.8.2019 முதல் அமலுக்கு வருகிறது. மேல்முறையீடு செய்யவும், மேல்முறையீடு திரும்பப் பெறவும், உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் வரிசெலுத்துவோரின் வழக்காட்டுச் சுமையும், வழக்குகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள வழக்குகளில் 52 வழக்குகளை திரும்பப் பெறவும், வருமானவரித் துறை உத்தேசித்துள்ளது. தமிழ்நாடு வருமானவரித் துறை வருமானவரி செலுத்துவோருக்கான நலன்சார்ந்த திட்டங்களை கொள்கை அளவிலும், செயல் வடிவிலும் முழுமையாக செயல்படுத்தி நாட்டின் முன்னோடி மண்டலமாக திகழ்கிறது.

வருமானவரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) முதன்மை தலைமை ஆணையர் சார்பில் வருமானவரித்துறை மேல்முறையீட்டு  தீர்ப்பாயம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மேல்முறையீடுகளை விரைவாக திரும்பப் பெற்று, வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருமானவரித்துறை ஆணையர் (நீதி) திரு.துர்கேஷ் சம்ரோட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.