14 தங்க பதக்கங்கள் வென்ற நாகப்பட்டிண மீனவரின் மகளுக்கு சத்குரு பாராட்டு..!

Scroll Down To Discover

நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவரின் மகளான ஐஸ்வர்யா, இளங்கலை மீன்வள அறிவியல் படிப்பில் 14 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சத்குரு அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவிற்கு தன் வாழ்த்துகளை பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

சத்குரு வாழ்த்து “ஐஸ்வர்யாவுக்கு என் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். என் வருங்காலத்தை நானே உருவாக்க வேண்டும் என்ற உன் உறுதியால் உன் சமூகத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளாய். உண்மையாகவே ஊக்கமளிக்கிறது. ஆசிகள். –சத்குரு”

டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் நேற்று நடைபெற்ற எட்டாவது பட்டமளிப்பு விழாவில் தங்கம் வென்ற மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், “தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் உதவியுடன், மீனவர் ஒதுக்கீட்டின் கீழ் படித்தேன். நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று இந்த படிப்பில் இணைந்தேன்” என தெரிவித்துள்ளார்.