கொச்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் மேயர் வேட்பாளர், பாஜக வேட்பாளரிடம் தோல்வி.!

அரசியல்

கொச்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் மேயர் வேட்பாளர், பாஜக வேட்பாளரிடம் தோல்வி.!

கொச்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் மேயர் வேட்பாளர்,  பாஜக வேட்பாளரிடம் தோல்வி.!

கேரளாவில் கடந்த 8, 10, 14ம் தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

3 கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.தொடக்கம் முதலே இடதுசாரிகள் கூட்டணி அனேக இடங்களில் முன்னிலை வகித்தன.

இந்நிலையில் கொச்சி மாநகராட்சியில், காங்கிரஸ் கட்சியின் மேயர் வேட்பாளர் என்.வேணுகோபால், வடக்கு தீவு வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தோல்வி குறித்து வேணுகோபால் கூறுகையில், ‘என்ன நடந்தது என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிக்கல் ஏற்பட்டது. அதுதான் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். வாக்களிக்கும் இயந்திரத்தில் உள்ள பிரச்சனை தொடர்பாக நீதிமன்றம் செல்வது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. என்ன நடந்தது என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்’ என்றார்.

Leave your comments here...