மீனாட்சி கோயிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பது எப்போது.. ? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.?

தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுவாமி சன்னதி செல்லும் வழியில் உள்ள வீரவசந்தராயர் மண்டப பகுதி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள் தீயில் கருகின.

அப்போது கோவில் பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் இருந்தால் இந்த சேதத்தை தவிர்த்து இருக்கலாம் என்று பல்வேறு அமைப்பினர் கருத்து தெரிவித்தனர். அதையடுத்து மீனாட்சி அம்மன் கோவிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். 

இந்த நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைநீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது   நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு பதில் அளிக்கப்பட்டது. அதனை தொடந்துமீனாட்சி கோயிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பது எப்போது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Leave your comments here...