எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதி : அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா

எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதி : அமைச்சரவை ஒப்புதல்

எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதி : அமைச்சரவை ஒப்புதல்

பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை-ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் அகண்ட அலைவரிசை வை-ஃபை வசதிகளை நாடு முழுவதும் உள்ள பொதுத்தரவு அலுவலகங்களின் வாயிலாக வழங்க முடியும்.

நாட்டில் பொது வை-ஃபை வலைப் பின்னல்களின் வளர்ச்சியை இத்திட்டம் ஊக்கப்படுத்தும். இதனால் அகண்ட அலைவரிசை இணைய வசதியின் வீச்சு அதிகமாகி, வருமானமும், வேலைவாய்ப்புகளும் பெருகி மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.PM-WANI.PM-WANI என்று அழைக்கப்படும் இந்த பொது வை-ஃபை வலைப் பின்னல்கள், பல்வேறு அமைப்புகளால் செயல்படுத்தப்படும்.

Leave your comments here...