நாட்டின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் கடற்படையின் முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பாராட்டு..!

சமூக நலன்

நாட்டின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் கடற்படையின் முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பாராட்டு..!

நாட்டின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் கடற்படையின்  முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பாராட்டு..!

புதுதில்லியில் கடற்படை கமாண்டர்கள் மாநாட்டில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், கடற்படையின் மூத்த அதிகாரிகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். கடற்படையின் பல்வேறு கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம் உள்ளிட்ட அமைப்புகளை பார்வையிட்டு, நடுக்கடலில் கடற்படையின் செயல்பாடுகளை நேரில் பார்த்தறிந்த திரு. ராஜ்நாத் சிங், நாட்டின் கடலோரப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் கடற்படை அதன் பணியை திறம்பட ஆற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Pictures For: Naval Commanders’ Conference in New Delhi

மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டதாக இந்தியாவை மாற்றுவதற்கு, நிலையான மற்றும் சமச்சீரான சூழல் அவசியம் என்றார்.  பொருளாதார வாழ்வாதாரமாகக் கருதப்படும் கடல்வழி தொலைத் தொடர்பு சேவைகளை பாதுகாப்பதில் கடற்படைக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஓமன் வளைகுடா பகுதிகளில் எண்ணெய் கப்பல்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, “ஆப்பரேஷன் சங்கல்ப்” என்ற பெயரில் கடற்படை நடத்திய விரைவான மற்றும் வரம்பிற்குட்பட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோல் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளின் போது, மனித நேய உதவிகளை கடற்படையினர் திறம்பட மேற்கொண்டதாகவும் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். மத்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கேற்ப கடற்படையிலும் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு மயமாக்கல் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.கடற்படையின் உயரதிகாரிகள் எதிர்கால தேவைக்கேற்ற வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்ட அவர், நமது பொருளாதார நலன்களுக்கு இணையாக கடலோர வல்லமை அதிகரிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

Comments are closed.