பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு – எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்..!

அரசியல்

பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு – எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்..!

பாபரி மஸ்ஜித் இடத்தை  முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு – எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்..!

பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு என சுல்தான்பெட் அண்ணா சுளை அருகில் ஓசூர், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

1992ம் ஆண்டு டிசம்பர் 06 அன்று ஒட்டுமொத்த உலகமே விழித்திருந்த நேரத்தில், அயோத்தியில் முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜித் சங்கபரிவார சக்திகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இடிக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டும் அல்ல, தேசத்தின் இறையாண்மையும், ஜனநாயகமும், வழிபாட்டு உரிமையும், மதசார்பின்மையும், சிறுபான்மையினரின் நலன்களும், பாதுகாப்பும் சேர்ந்தே அப்போது தகர்க்கப்பட்டது. எனினும் இந்த பயங்கரவாதத்துக்கு எதிராக நிச்சயம் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 நவம்பர் 9 அன்று, நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், கடந்த செப்.30 அன்று பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இந்திய நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தெறிந்தன. இதனால் உலக நாடுகளுக்கு முன்னாலும், சர்வதேச ஊடகங்களுக்கு முன்னாலும் இந்திய நீதித்துறை கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில், டிசம்பர் 6 பாபரி மஸ்தித் தினத்தன்று, பாபரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ அமல்படுத்தி, பாபரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும், பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும், மத்திய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதனடிப்படையில் ஓசூர், சுல்தான்பெட், அண்ணா சுளை அருகில், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொகுப்புரை மற்றும் வரவேற்புரை ஷபீர் அகமத் மாவட்ட செய்தி தொடர்பாளர்.
ஷாநவாஸ் கான் மாவட்ட துணை தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை, முகமத் பாதுஷா மிசுபஹி, தமிழ் மாநில செயலாளர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில். ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். முன்னிலை, அஜஸ் மாவட்ட செயலாளர் பாப்புலர் பிராண்ட், முகமத் அயஸ் மாவட்ட தலைவர் வர்த்தக ஆணி, சயீத் அமீன் மாவட்ட துணை தலைவர் வர்த்தக ஆணி, பாரூக் மாவட்ட பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நன்றி உரை, முகமத் அயஸ், நகர செயலாளர்.கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

செய்தி : Mohammed younus

Leave your comments here...