உலக அளவில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

இந்தியாஉலகம்

உலக அளவில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

உலக அளவில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் அன்னாபொலிஸ் நகரில் லஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு, அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் மொத்தம் 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை மதிப்பிட்டு பட்டியலிட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியான பட்டியலில் வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தெற்குசூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளன.

இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

லஞ்சம் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து நாடுகள் உள்ளன. பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது

Leave your comments here...