சென்னை விமான நிலையத்தில் ரூ 97.7 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ 97.7 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ 97.7 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ 97.7 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று ஒரே நாளில் ஐந்து தங்கக் கடத்தல் சம்பவங்கள் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன.

எமிரேட்ஸ் விமானம் ஈகே-544 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது தாரிக், 36, மற்றும் முகமது பாரிஸ், 26, மற்றும் சென்னையை சேர்ந்த சிக்கந்தர் மஸ்தான், 36, மற்றும் ரகுமான் கான், 31, ஆகியோர் தங்களது உடல்களில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வருவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர்.

அவர்களை சோதனையிட்டபோது, தங்கப் பசையைக் கொண்ட 1.93 கிலோ எடையுடைய 12 பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றுள் இருந்த ரூ 84.94 லட்சம் மதிப்புடைய 1.61 கிலோ எடையுடைய 24 கேரட் தங்கம், சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் ஞாயிறு பின்னிரவில் நடைபெற்ற இன்னொரு சம்பவத்தில், ஃப்ளை ஃப்ளைட் துபாய் எப் இசட் 8517 மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர், 34, என்பவர் வெளியே செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் சோதனை செய்யப்பட்டதில் இரண்டு பொட்டலங்களில் தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. 243 கிராம் எடையுடைய ரூ 12.8 லட்சம் மதிப்புடைய 24 கேரட் தங்கம் அவரிடம் இருந்து சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் ஏற்கனவே ஒரு குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர் ஆவார்.மொத்தம் ரூ 97.7 லட்சம் மதிப்புடைய 1.85 கிலோ தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது

Leave your comments here...