தெய்வீக சக்தியை பெற உதவும் சக்தி மந்திரம்..!

ஆன்மிகம்

தெய்வீக சக்தியை பெற உதவும் சக்தி மந்திரம்..!

தெய்வீக சக்தியை பெற உதவும் சக்தி மந்திரம்..!

இவ்வுலகம் தெய்வீக சக்தியாலும், பஞ்சபூதங்களினாலும் இயங்கி கொண்டிருக்கிறது.  அதில் பல கோடி ஜீவ ராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் மனித பிறவி என்பது மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் மனித பிறவியே தெய்வ நிலைக்கும் உயரகூடிய சக்தியாகவும் விளங்குகிறது.

அது அவரவர் மனதை பொருத்து அமைகிறது. மனிதர்களின் மனம் ஒருவருக்குகொருவர்
வேறுபடுகிறது. அதிலும் சில மனிதர்களுடைய மனம் ஒரு நிலை இல்லாமலும், மிகவும் பலவீனமாகவும் காணப்படுகிறது. வாழ்வில் மனித பிறவி எடுத்த ஒருவர் செய்யும் அனைத்து செயலிற்கும் காரணம் அவரது மனமே.  மன பலம் இல்லாத ஒருவர் அனைத்திலும் பலவீனமாகவே இருப்பார். மன பலவீனத்தை அதிகரிப்பது மன துயரமே. ஆகையால் மன துயரத்தை போக்கி, மனதை திடப்படுத்தி, உடல் சக்தியையும், ஆன்ம சக்தியையும், தெய்வீக சக்தியையும் அதிகரிக்க உதவும் ஒரு அற்புதமான மந்திரம் இதோ…..:

சக்தி மந்திரம்:
ஓம் தேஜோஅஸி தேஜோமயி தேஹி வீரயமஸி

வீரியம் மயி தேஹி பலமஸி பலம் மயி தேஹி

ஓஜோஅஸி ஓஜோமயி தேஹி மந்யூரஸின்யும் மயி

தேஹி ஸஹோஸி ஸஹோமயி தேஹி ஓம்

இந்த மந்திரத்தின் பொருள்:-

ஆன்மசக்தியாய் இருக்கும் இறைவா, எனக்கு ஆன்ம சக்தியை தர வேண்டுகிறேன்.
ஒழுக்க சக்தியாய் இருக்கும் இறைவா எனக்கு ஒழுக்க சக்தியை தர வேண்டுகிறேன்.
உடல் சக்தியாய் இருக்கும் இறைவா, எனக்கு உடல் சக்தியை தர வேண்டுகிறேன்.
தெய்வீக சக்தியாய் இருக்கும் இறைவா எனக்கு தெய்வீக சக்தியை தரவேண்டுகிறேன்.
தைரியத்தின் சொரூபமாக இருக்கும் இறைவா எனக்கு தைரியத்தை தர வேண்டுகிறேன்.
பொறுமையின் உச்சமாய் இருக்கும் இறைவா எனக்கும் பொறுமையை தர வேண்டுகிறேன்.      என இவை அனைத்தும் தெய்வ சக்தி பெற உதவும் மந்திரமகும்…!!

Comments are closed.