13-வருடமாக தினந்தோறும் சிவவழிபாட்டை நடத்தி வரும் முஸ்லிம் பெண் நூர் பாத்திமா..

Scroll Down To Discover

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் வக்கீலாக இருப்பவர் நூர் பாத்திமா. இவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் இவர் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து வாரணாசியில் குடியிருந்து வருகிறார். தன்னுடைய சொந்த வீட்டில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் தினந்தோறும் சிவ வழிபாட்டை மேற்கொண்டு வருகிறார்.மேலும் சிவனுக்கு அபிஷேகமும் செய்து வருகிறார். ரயில்வே துறையில் பணி புரிந்த வந்த கணவருடன் கடந்த 2004 ம் ஆண்டில் வாரணாசிக்கு குடிபெயர்ந்த நூர் பாத்திமா அங்கேயே சொந்த வீடு கட்டி உள்ளார். அப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பலர் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களில் பெண் வக்கீல் நூர் பாத்திமாவின் கணவரும் ஒருவர்.


இது குறித்து அவர் கூறுகையில்:- நான் சிவன் இருப்பதை ஏற்றுக்கொண்டு உள்ளேன். அவர் காசியின் ஆத்மாவாக இருக்கிறார். இந்த புனித நகரத்தின் நெறிமுறைகளின் ஒரு பகுதியாக இருக்கிறார். மேலும் தினந்தோறும் ஹர் ஹர் மகாதேவ் ஸ்லோகத்துடன் அன்றைய தின வாழ்க்கையை துவங்குகிறேன்.

இதற்காக நான் முஸ்லிம் மதத்தை விட்டு வெளியேறி விட்டேன் என்று அர்த்தமல்ல என கூறினார்.தனது கணவர் மறைவை தொடர்ந்து ஆறுதலுக்கான தேடலில் சிவ வழிபாட்டை மேற்கொண்டாக கூறி உள்ளார்.மேலும் தொடரந்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்ந்தால் தான் நாடு அபிவிருத்தி அடையும் என்றும் கூறியுள்ளார்