13 மணி நேர சோதனை – அமலாக்கத் துறை​யினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்..!

Scroll Down To Discover

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 13 மணிநேர சோதனைக்கு பின் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (17/07/2023) நண்பகல் முதல் சோதனையில் ஈடுபட்டனர். சிஆர்பிஎஃப் காவலர்களின் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்றது.

சென்னை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொன்முடி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் 13 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக அவரது வீட்டிலிருந்து அமலாக்கத்துறையினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.