பெண் குழந்தைய: தொலைபேசியில் முத்தலாக் கூறிய கணவர்…!

சமூக நலன்

பெண் குழந்தைய: தொலைபேசியில் முத்தலாக் கூறிய கணவர்…!

பெண் குழந்தைய: தொலைபேசியில் முத்தலாக் கூறிய கணவர்…!

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இதனால் அவரது கணவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு முத்தலாக் கூறியுள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அந்த பெண் கூறும்பொழுது:- கடந்த 11 வருடங்களுக்கு முன் கமீல் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் 5வது முறையாக எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.இந்த செய்தியை அறிந்த எனது கணவர் எனக்கு முத்தலாக் கொடுத்து விட்டார் என்று வருத்தமுடன் தெரிவித்து உள்ளார்.

திருமணமான முஸ்லிம் ஆண், தன்னுடைய மனைவியை மூன்று தடவை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை நிலவி வந்தது. சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்பேரில், முத்தலாக்கை தடை செய்ய கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Comments are closed.