இஸ்லாமியர்களை புறக்கணித்து விட்டேன் என திமுக வதந்தி பரப்புகிறது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்

சமூக நலன்

இஸ்லாமியர்களை பற்றி தான் தவறாக பேசியதாக பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கருவேலங்குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன் மீது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அவதூறு பரப்புவதாக தனக்கு தகவல்கள் வருவதாக தெரிவித்தார்.திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம். இதன் பின்னணியில் திமுக உள்ளது. எதையும் வெளிப்படையாக பேசுபவன் நான். அதிமுகவிற்கு ஓட்டுப்போட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் தயாராகிவிட்டனர். வேலூர் லோக்சபா தேர்தலில் 30 சதவீத முஸ்லீம்கள் ஓட்டு போட்டனர். அதிமுகவில் பிரச்னைகள் நடந்தாலும் முதல்வர், துணை முதல்வரிடம் பேசுவேன். சில முறை எனக்கு பிரச்னை கூட வந்தது.அன்று என்னை சந்திக்க வந்தவர்களை, காலையில் வரும்படி கூறிவிட்டு சென்றேன். அவர்கள் என் வீட்டில் சாப்பிட்டு தான் சென்றனர். அவர்கள் என்னிடம் பேசியது 10 நிமிடம் கூட இருக்காது. ஆனால், ஜமாத் நபர்களை புறக்கணித்து விட்டேன் என திமுக வதந்தி பரப்புகிறது என்றார்.

Comments are closed.