24 மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்த வ.உ.சிதம்பரனார் துறைமுகம்.!

தமிழகம்

24 மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்த வ.உ.சிதம்பரனார் துறைமுகம்.!

24 மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்த வ.உ.சிதம்பரனார் துறைமுகம்.!

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்கு தளம் 9-ல் 27.10.2020 அன்று எம்.வி.ஓசன் டீரீம் என்ற கப்பலிலிருந்து 56.687 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இச்சாதனையானது இதற்கு முந்தைய சாதனையான 19.06.2020 அன்று கப்பல் சரக்கு தளம் 9-ல் எம்.வி.மைசிர்னி என்ற கப்பலிலிருந்து 24 மணி நேரத்தில் கையாளப்பட்ட அளவான 57.785 டன் நிலக்கரியை விட அதிகமாகும்.

ஹாங்காங் கொடியுடன் வந்துள்ள எம்.வி.ஓசன் டீரீம் என்ற பனமாக்ஸ் கை கப்பல் 82.201 DWT, 229 மீட்டர் நீளமும், 32.26 மீட்டர் அகலமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழத்துடன் இந்தோனேஷியா நாட்டிலுள்ள அதாங் பே என்ற துறைமுகத்திலிருந்து 77,535 டன் நிலக்கரியை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளது.

இக்கப்பலில் வந்த 77,535 டன் நிலக்கரியும் இந்தியா கோக் அன் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இக்கப்பலிலிருந்து நிலக்கரியை இம்கோலா கிரேன் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரகளால் 24 மணி நேரத்தில் 56,687 டன் நிலக்கரியை கையாண்டுள்ளது குறிப்பித்தக்கது.

இந்த சாதனையின் கப்பல் முகவர் வோல்டுவைடு ஷிப்பிங் இன்ங் லிமிடெட், தூத்துக்குடி மற்றும் ஸ்டிவிடோர் ஏஜெண்ட் வில்சன்ஸ் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி ஆவர். வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் திரு. தா.கீ.ராமச்சந்திரன், இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் பாராட்டியதுடன் இனி வருங்காலங்களில் இது போன்ற பல சாதனைகளைப் தொடர்ந்து புரிய கேட்டுக் கொண்டார்.

Leave your comments here...