பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி : டிரஸ்ட் & என்.ஜி.ஓ..க்களில் என்ஐஏ தேடுதல் வேட்டை .!

இந்தியா

பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி : டிரஸ்ட் & என்.ஜி.ஓ..க்களில் என்ஐஏ தேடுதல் வேட்டை .!

பயங்கரவாத அமைப்புகளிடம்  நிதி : டிரஸ்ட் & என்.ஜி.ஓ..க்களில் என்ஐஏ தேடுதல் வேட்டை .!

ஸ்ரீநகர், பந்திப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள சில டிரஸ்ட்கள் மற்றும் என்.ஜி.ஓ.,க்களுக்கு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி தேசிய புலனாய்வு அமைப்புக்குத் தகவல்கள் கிடைத்தன.

இவ்வழக்கில் புதிய விசாரணைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அத்ரவுட் மற்றும் கிரேட்டர் காஷ்மீர் டிரஸ்ட் அலுவலகங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் இன்று (அக்.,28) தேசிய புலனாய்வு அமைப்பு, திடீர் சோதனைகளை நடத்தியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: என்.ஐ.ஏ.,வின் தேடுதல் வேட்டை இன்று காலை தொடங்கியது. உள்ளூர் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படை ஆகியவற்றின் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்புக்குழு ஸ்ரீநகரில் இயங்கிவரும் ஒரு முக்கிய ஆங்கில நாளிதழின் வளாகத்தில் அமைந்துள்ள டிரஸ்ட் அலுவலகம், 2000ம் ஆண்டில் நிறுவப்பட்ட 3 என்.ஜி.ஓ.,க்கள் என ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நிதியுதவி செய்யப்பட்டதாக கூறப்படும் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த என்.ஜி.ஓ.,க்கள் வெளிப்படுத்தப்படாத நன்கொடையாளர்களிடமிருந்து பணம் பெற்று வருகின்றன. அவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Leave your comments here...