சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏசி இறக்குமதிக்கு தடை – மத்திய அரசு அறிவிப்பு.!

இந்தியா

சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏசி இறக்குமதிக்கு தடை – மத்திய அரசு அறிவிப்பு.!

சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏசி இறக்குமதிக்கு தடை – மத்திய அரசு அறிவிப்பு.!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து, ‘ரெப்ரிஜிரிரன்ட்ஸ்’ எனப்படும் குளிரூட்டிகளுடன் வரும், ‘ஸ்பிலிட்’ உள்ளிட்ட ஏ.சி., வகைககளை, இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு நேற்று தடை விதித்தது.இதற்கான அறிவிப்பை, மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், டி.ஜி.எப்.டி., எனப்படும், வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் வெளியிட்டது.

உள்நாட்டு சந்தையில், 36 – 44 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, ‘ஏசி’க்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை, அதிக அளவில் விற்பனை ஆகின்றன. இதை தடுத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Leave your comments here...