திமுக எம்.பி. கவுதம சிகாமணியின் 8 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் : அமலாக்கத்துறை நடவடிக்கை

அரசியல்

கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி. கவுதம சிகாமணியின் 8 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நிய செலாவணி விதிகளை மீறி திமுக எம்.பி. கவுதம சிகாமணி வெளிநாடுகளில் சொத்து வாங்கியதாகவும், பல்வேறு முதலீடுகள் செய்ததாகவும் அமலக்கத்துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. எக்ஸல் மெஜிடோ மற்றும் யுனிவெர்சல் பிசினஸ் வென்சர் என்ற நிறுவனங்களின் 2 லட்சத்து 45 ஆயிரம் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியதன் மூலம், சுமார் 7 கோடியே 6 லட்சத்து 57 ஆயிரத்து 537 ரூபாய் லாபம் ஈட்டியதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வெளிநாட்டில் கௌதம சிகாமணியின் பெயரில் கணக்கில் வராத சொத்துக்களின் மதிப்பின் ஈடாக, இந்தியாவில் உள்ள அவரின் அசையா சொத்துக்களை அமலக்கத்துறை முடக்கியுள்ளது. இதனடிப்படையில், 8 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில், தமிழகத்தில் அவருக்கு சொந்தமான விவசாய நிலம், வீடு, வணிக வளாகம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...