தமிழ் உணர்வாளராகக் காட்டிக் கொள்ளும் நடிகர் விஜய் சேதுபதி – எல்லாம் பொய்யா கோபால் : 800 படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

சினிமா துளிகள்

தமிழ் உணர்வாளராகக் காட்டிக் கொள்ளும் நடிகர் விஜய் சேதுபதி – எல்லாம் பொய்யா கோபால் : 800 படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

தமிழ் உணர்வாளராகக் காட்டிக் கொள்ளும் நடிகர் விஜய் சேதுபதி – எல்லாம் பொய்யா கோபால் : 800 படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

முரளிதரனின் குழந்தைப் பருவத்தில் துவங்கி, அவரது பந்து வீசும் முறை சர்ச்சையானது, அவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தது வரை பேசுகிறது இத்திரைப்படம்.’800′ படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.முத்தையா முரளிதரன் பயோபிக்கைத் தவிர்க்கவும் என்று விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு ‘800’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தொடர்ச்சியாக சமூக வலைதளத்திலும் இந்த எதிர்ப்பு எதிரொலித்து வருகிறது.

இயக்குநர் சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் ‘800’ படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.முரளிதரன் இலங்கை இனப் போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. மேலும், விஜய் சேதுபதி தன்னை ஒரு தமிழ் உணர்வாளராகக் காட்டிக் கொள்பவர். அப்படியிருக்கும் போது அவர் எப்படி இதில் நடிக்க சம்மதித்தார் என தெரியவில்லை.

Leave your comments here...