உள்ளாட்சி தேர்தலுக்கு அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு…!!

அரசியல்

உள்ளாட்சி தேர்தலுக்கு அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு…!!

உள்ளாட்சி தேர்தலுக்கு அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம்  ஒதுக்கீடு…!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேசிய கட்சிகள் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கும், மாநில கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அக்கட்சிகளின் சின்னங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட 247 கட்சிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சிகளுக்கு இலவச சின்னங்கள் ஒதுக்கப்படும்.

இதன்படி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், டவுன் பஞ்சாயத்து தலைவர், 2ம் நிலை பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட தேர்தலுக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர், டவுன் பஞ்சாயத்து தலைவர், நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கும் தலா 30 இலவச சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலுக்கும் 30 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுப்பிரிவுக்கான சின்னங்கள் ஆகியவற்றையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Comments are closed.