ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பெருகி வரும் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

அரசியல்தமிழகம்விளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பெருகி வரும் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பெருகி வரும் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பெருகி வரும் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- ஐ.பி.எல்.(இந்தியன் பிரிமியர் லீக்) கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் கொடிகட்டி பறக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் அபுதாபு, சார்ஜா உள்ளிட்ட நகரங்களில் இப்போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர். 20 ஓவர்கள் கொண்ட போட்டி நடைபெறும் போது எந்த அணி வெற்றி பெரும், யார் எவ்வளவு ரன் அடிப்பார்கள் எந்த ஓவரில் எத்தனை ரன், சிக்ஸர் அடிக்கப்படும் என்பது பற்றி எல்லாம் பந்தயம் கட்டி சூதாட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், அனைத்து தரப்பு மக்களின் கவனம் சிதறுகிறது. வீடுகள், விடுதிகள், பொது இடங்கள், ஆகியவற்றில் யார் ஜெயிப்பார்கள் என்கின்ற பெட்டிங் (சூதாட்டம்) நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேட்ச் பிக்சிங்கும்(முன் கூட்டியே முடிவு செய்தல்) நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரை அதுவும் தற்போது ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்று கொண்டிருக்கின்றவரை இதற்கான தரகர்கள் அணுகி மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஆன்லைனில் ரம்மி சீட்டு ஆட்டம், சூதாட்டம் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. பலர் பணத்தை இழந்து தவித்து வருகின்றார்கள்.

இதற்கு அவர்களது பேராசை ஒரு காரணம் என்று நாம் சொன்னாலும் இந்த நவீன தொழில் நுட்பங்களையும், இணையதள வசதி களையும், செல்போன் வசதிகளையும், பொது மக்களின் கிரிக்கெட் மோகத்தையும் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய மோசடிகள் நடைபெற்று வருவதை எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.

பலருடைய வாழ்வும் பணமும் நேரமும் போய்க்கொண்டிருக்கிறது எதிர்காலம் பாழாகிக் கொண்டிருக்கிறது இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்காக இந்து மக்கள் கட்சியின் சார்பில் வருகின்ற வாரத்தில் ஐ.பி.எல் எனும் பெயரில் நடைபெறும் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் மத்தியிலே பிரச்சார இயக்கத்தை நடத்த இருக்கின்றோம். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பாரதப் பிரதமர் மோடி ஆகியோருக்கு இது சம்பந்தமாக நாங்கள் கோரிக்கை மனுவையும் சமர்ப்பிக்க இருக்கின்றோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave your comments here...