டெல்லி: 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதம் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே 15 முதல் 18 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது.நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பேராயுதமாக விளங்கி வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.
Leave your comments here...