கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு ரயில்களை, ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. இந்நிலையில், கூடுதலாக, 80 சிறப்பு ரயில்களை, இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் நேற்று கூறியதாவது:- நாட்டில், ஏற்கனவே, 230 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூடுதலாக சில சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, வரும், 12ம் தேதி முதல், 80 புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதற்கான முன்பதிவு, 10ம் தேதி துவங்கும்.
தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களை, ரயில்வே நிர்வாக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதன் காத்திருப்பு பட்டியல், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட ரயிலின் தேவை அதிகமாக இருந்தாலும், அதன் காத்திருப்பு பட்டியல் நீளமாக இருந்தாலும், அந்த ரயிலுடன் மற்றொரு ரயிலும், முன்கூட்டியே இயக்கப்படும். இதன்மூலம், பயணியர் அனைவரும் தடையின்றி பயணிக்கலாம்.தேர்வுகள் உள்ளிட்ட அத்தியாவசிய நோக்கங்களுக்கு ரயில்களின் தேவை இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட மாநிலங்களில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
Leave your comments here...