வரலாற்று சந்திப்பு : வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் அச்த்திய பிரதமர் மோடி..!!

அரசியல்

வரலாற்று சந்திப்பு : வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் அச்த்திய பிரதமர் மோடி..!!

வரலாற்று சந்திப்பு : வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் அச்த்திய பிரதமர் மோடி..!!

சீன பிரதமர் ஜின்பிங் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்காக சென்னை வந்த மோடி, கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். பின்னர், மாலை 4 மணிக்கு, கார் மூலம் மாமல்லபுரம் கிளம்பினார். வழியில், மாணவ, மாணவிகள் மோடியை , தேசிய கொடியை அமைத்து வரவேற்றனர். தமிழக பாரம்பரிய நடன இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் தமிழகத்தின் பாரம்பரியமான உடையான, வேஷ்டி, சட்டை மற்றும் தோளில் துண்டு அணிந்தவாறு மோடி, மாமல்லபுரம் வந்தார். அங்கு,மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி, அங்குள்ள வரலாற்று சிற்பங்கள் குறித்து விளக்கி கூறினார்.கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து, சாலை மார்க்கமாக கார் மூலம் மாமல்லபுரம் வந்த ஜின் பிங்கை, பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, அர்ச்சுனன் தபசிற்கு இரு தலைவர்களும் சென்றனர்.ஜின்பிங்கை, அர்ச்சுனன் தபசை சுற்றி காட்டிய மோடி, அங்குள்ள சிற்பங்கள், வரலாறு, தொன்மை மற்றும் அதன் சிறப்புகளை விளக்கி கூறினார். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை இருவரும் ரசித்தனர். அதன் சிறப்புகள் குறித்தும் ஜின்பிங்கிடம் மோடி விளக்கி கூறினார். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், இரு தலைவர்களும் கைகளை கோர்த்து உயர்த்தி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பின்னர் ஐந்து ரதம் பகுதிக்கு , மோடியும், ஜின்பிங்கும் சென்றனர். அங்கு, கைகளை குலுக்கியபடி இருவரும் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர், அங்குள்ள சிற்பங்கள் குறித்தும், அதில் உள்ள வேலைப்பாடுகள், சிறப்புகள், தொன்மை குறித்து மோடி விளக்கி கூறினார்.

பிரதமர் மோடி, சீன அதிபரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்தது. உரையாடலுக்கு பின், மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டுகளித்தனர். பாரமபரிய கலைகளான தமிழகத்தின் பரதநாட்டியம், கேரளாவின் கதகளி குறித்த அறிமுக உரை சீன மொழியான மாண்டரினில் மொழிபெயர்த்து வழங்கப்பட்டது.

கலாஷேத்ரா குழுவினரின் பரதநாட்டியம் முதலிலும் பின்னர் கதகளியும் அரங்கேற்றப்பட்டது. பிரதமர் மோடி இசைக்கேட்ப தாளமிட்டு மகிழ்ந்தார்.தொடர்ந்து, ராமாயண காட்சிகளை கலைஞர்கள் அரங்கேற்றினர். வாலி வதை படலம், ராமர் சேது பாலம் அமைக்கும் காட்சிகளை நடன கலைஞர்கள் நடித்து காட்ட, இருநாட்டு தலைவர்களும் ரசித்து பார்த்தனர். நடனம் குறித்தும், ராமாயண காட்சிகள் குறித்தும் சீன அதிபருக்கு பிரதமர் மோடி அவ்வப்போது விளக்கி கூறினார். கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் இரு நாட்டு தலைவர்களும் நாட்டிய கலைஞர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மாமல்லபுரத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, பிரதமர் மோடி நினைவு பரிசு வழங்கினார். நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு, தஞ்சாவூர் நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி வழங்கினார்.

Comments are closed.