இந்திய பாரம்பரியம் எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்கு கிண்டலாகத்தான் தெரியும் – அமித்ஷா

அரசியல்

இந்திய பாரம்பரியம் எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்கு கிண்டலாகத்தான் தெரியும் – அமித்ஷா

இந்திய பாரம்பரியம் எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்கு கிண்டலாகத்தான் தெரியும் – அமித்ஷா

ஹரியானா மாநிலத்தில் வரும் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா கைத்தால் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, பேசிய அமித் ஷா:-

பிரான்ஸில் இருந்து பெறப்பட்ட ரபேல் விமானத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சாஸ்திர பூஜை செய்ததை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்வதாகவும் இந்திய பாரம்பரியம் எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்கு கிண்டலாகத்தான் தெரியும் என்று சாடினார்.தொடர்ந்த பேசிய அமித்ஷா சட்ட விரோதமாக குடியேறிய ஒவ்வொருவரையும் அவரவர் நாட்டிற்கே அனுப்புவது தான் பாஜகவின் கொள்கை என்றும், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனுமதியின்றி இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய அமிஷ் ஷா, அதனை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா, இல்லையா என்பதை ராகுல்காந்தி தெளிவுப்படுத்த வேண்டும் என்று பேசினார்..

Comments are closed.