மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றும் தடை விதிக்கும் சட்டத்தை கடுமையாக்கும் புதிய மசோதா

அரசியல்இந்தியா

மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றும் தடை விதிக்கும் சட்டத்தை கடுமையாக்கும் புதிய மசோதா

மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றும்  தடை விதிக்கும் சட்டத்தை கடுமையாக்கும் புதிய மசோதா

வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பார்லிமென்டில், நாளை மழைக்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளது. அவை நடவடிக்கைகளில் பங்கேற்கும் எம்.பி.,க்களுக்கும், இதர அதிகாரிகளுக்கும், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தொடரில், 23 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி, மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை விதிக்கும் சட்டத்தை, மேலும் கடுமையாக்கும் சட்ட திருத்த மசோதா, தாக் கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறையை இயந்திரமயமாக்கவும், அந்த பணியின்போது நேரும் விபத்துகளில், தொழிலாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும், இந்த சட்ட திருத்த மசோதா வழிவகுக்கிறது.அபராதம் தற்போது உள்ள சட்டத்தின்படி, தனிநபரோ அல்லது ஒரு நிறுவனமோ, கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, தொழிலாளர்களை அழைத்து வேலை வாங்கினால், அவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் கிடைக்கும்.

இந்த சட்டத்திருத்த மசோதா மூலம், சிறை தண்டனையின் ஆண்டுகளை அதிகரித்து, அபராதத் தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுஉள்ளது.நாட்டில், கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உயிரிழப்புகள், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால், இதை கருத்தில் கொண்டு, சட்டத்தை மேலும் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டதாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...