திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 60,000 கோடி ரூபாய் சொத்துக்களை ஆட்டைய போட நினைத்த கும்பல் – சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகம்

திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 60,000 கோடி ரூபாய் சொத்துக்களை ஆட்டைய போட நினைத்த கும்பல் – சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 60,000 கோடி ரூபாய் சொத்துக்களை ஆட்டைய போட நினைத்த கும்பல் – சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தான் கோவிலுக்குச் சொந்தமான, சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்புடைய 2,000 ஏக்கர் நிலம் உள்ளது. கோவில் சொத்துக்களை அபகரிக்க 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தி, கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளை வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்யவும், அதன் அறிக்கையை தாக்கல் செய்யவும், வருவாய்த்துறைச் செயலருக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த இடைக்கால அறிக்கையில், சர்வே எண், எவ்வளவு சதுர அடி நிலம், கடந்த 10 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ்கள், பட்டா, சிட்டா, ஏ ரிஜிஸ்டர், அடங்கல், நிலத்தின் வகைப்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கவேண்டும் என்றும் வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும்.அதேபோல, சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை தாக்கல் செய்ய திருப்போரூர் முருகன் கோவில், ஆளவந்தான் கோவில் செயல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்யவோ, வில்லங்க சான்றிதழ் வழங்கவோ கூடாது என்று தமிழக பத்திரப்பதிவு துறை ஐ.ஜி., திருப்போரூர் சார்பு பதிவாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தான் கோவிலின் சொத்துகளை, மறுஉத்தரவு வரும் வரை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என, திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

திருப்போரூர் கோவில் தொடர்பான இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.

Leave your comments here...