பிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி – என்ன சொன்னார் தெரியுமா…?
- September 4, 2020
- g-pandian
- : 885
- PMMODI

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம், ‛இன்ஜினியரிங் படித்து விட்டு காவல் அதிகாரியாக மாற ஏன் முடிவு செய்தீர்கள்?’ என பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார்.சீருடை அணிந்து மக்களுக்கு சேவையாற்ற பெற்றோர் விரும்பியதால் காவல்துறையை தேர்ந்தெடுத்தேன் என்று கிரண் ஸ்ருதி தெரிவித்தார்.
Interaction with young police officers. https://t.co/J5eX6RI4qx
— Narendra Modi (@narendramodi) September 4, 2020
அத்துடன் கிரண்பேடி போலவே வரவேண்டும் என்பதற்காக தனக்கு கிரண்ஸ்ருதி என பெற்றோர் பெயர் வைத்ததாக அவர் பதில் அளித்தார்.
மேலும் இளம் ஐபிஎஸ் வீரர்கள் டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய யோகா செய்ய வேண்டும் என்றும் மோடி அறிவுறுத்தினார். சவால்களை எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். உங்கள் சீருடையால் நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். மரியாதையை ஒருபோதும் இழக்காதீர்கள் என அறிவுரை வழங்கினார்.
Leave your comments here...