நிலத்தடி நீரின் அளவு உயர்வு – சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிக்கை..!
- October 5, 2019
- jananesan
- : 913
நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சென்னை மாநகரில் நிலத்தடி நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
சென்னை மாநகரில் கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான நிலத்தடி நீர்மட்டம் உயர்வு குறித்து ஒப்பீடு அளவீடுகளுடன் வரைபடமும் வெளியிடப்பட்ள்ளது. சென்னை மாநகரில் பகுதி வாரியாக நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணிக்க பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பாக கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அம்பத்தூர், சோழிலங்கநல்லூர், பெருங்குடி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனிசமாக உயர்ந்துள்ள நிலத்தடி நீர்மட்டத்தை கணித்து நிலத்தடி நீரின் அளவு மற்றும் உயர்வு குறித்து வரைபடம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை நமக்கு அளித்துள்ள பெருங்கொடையான மழை நீரை அனைவரும் ஒன்றுபட்டு சேமித்து பூமிக்குள் செலுத்தினால் நிலத்தடி நீர்மட்டத்தை வெகுவாக உயர்த்த முடியும் என்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருவதின் பலனாக நிறைய வீடுகளில் மழைநீரை சேகரித்து பூமிக்குள் விடுகிறார்கள். கிணறு வைத்திருப்பவர்கள் மழை தண்ணீரை கிணற்றில் விடுகின்றனர். இதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட அதிகமாக பொழிந்த தென்மேற்கு பருவமழை காரணமாகவும் நிலத்தடி நீர்மட்டம உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது