அறநிலைய துறை E.O-வை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

அரசியல்

அறநிலைய துறை E.O-வை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

அறநிலைய துறை E.O-வை கண்டித்து  பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே நிலைய மேம்பாலம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதான சாலையில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்பே சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.

ஆனால் அறநிலைய துறை கோவில்பட்டி EO ஆக்கிரமிப்யாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆகவே அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் போத்திஸ் இராமமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். நகர தலைவர் மா.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். உடன் மாவட்ட பொது செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave your comments here...