வலுக்கும் எதிர்ப்பு : சபரி மலை ஐயப்பன் கோயில் நகையை அடமானம் வைக்கும் தேவசம்போர்டு – அர்ஜூன் சம்பத் கடும் கண்டனம்..!

இந்தியா

வலுக்கும் எதிர்ப்பு : சபரி மலை ஐயப்பன் கோயில் நகையை அடமானம் வைக்கும் தேவசம்போர்டு – அர்ஜூன் சம்பத் கடும் கண்டனம்..!

வலுக்கும் எதிர்ப்பு : சபரி மலை ஐயப்பன் கோயில் நகையை அடமானம் வைக்கும் தேவசம்போர்டு – அர்ஜூன் சம்பத் கடும் கண்டனம்..!

சபரி மலை ஐயப்பன் கோயில் நகைகளை அடமானம் வைத்து நிர்வாகம் நடத்தும் முடிவை கைவிட வேண்டி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்தது உள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் :-

உலகம் முழுவதும் உள்ள ஐய்யப்ப பக்தர்களின் புனிதத் தலமான சபரிமலை ஸ்ரீ ஐய்யப்பன் கோயில் வழிபாட்டிற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடி கட்டி வந்து காணிக்கை செலுத்துவார்கள். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கேரள தேவசம்போர்டுக்கு கிடைக்கின்றது. கடந்த காலங்களில் ரூபாய் 300 கோடி வரை வருமானம் உள்ளது. கோயிலின் மீது பந்தள இராஜ குடும்பத்திற்கு பாரம்பரிய உரிமை உள்ளது.

ஸ்ரீ ஐய்யப்பனுக்கு அனிவிக்கப்படும் ஆபரணங்கள் உள்ள ஆபரனப்பெட்டி விழாக்களின் போது கோயிலுக்கு கொண்டுவரப்படும். கோயிலுக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் சொத்துக்களும் உள்ளன. கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் புனிதம் கெடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தேவசம்போர்டு நிர்வாகத்தில் ஊழல் மற்றும் நிர்வாகம் சீர்கேடு காரணமாக தற்பொழுது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லை என்று கூறி நகைகளை அடமானம் வைத்துள்ள செய்தி உலகெங்கிலும் உள்ள ஐய்யப்ப பக்தர்களை அதிர்ச்சியும், வேதனையும் அடையச்செய்துள்ளது. கோயிலை நிர்வாகம் செய்ய முடியாத தேவசம்போர்டை கலைத்து விட்டு, கோயில் நிர்வாகத்தை மன்னர் குடும்பத்திடம் அல்லது பக்கதர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசாங்கம் சிறப்புச் சட்டம் இயற்றி சபரிமலை ஐய்யப்பன் கோயில் நிர்வாகத்தை மத்திய அரசே எடுத்து நடத்திட வேண்டும். தொடர்ந்து கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசாங்கம் சபரிமலை ஐய்யப்பன் கோயில் புனிதம் கெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கம்யூனிஸ்டுகளின் நிர்வாகத்தில் இத்தகைய குளருபடிகளை சந்திக்க வேண்டி உள்ளது.

சபரி மலை ஐயப்பன் கோயில் நகைகளை அடமானம் வைத்து நிர்வாகம் நடத்தும் முடிவை தேசம்போர்டு கைவிட வேண்டும் திருக்கோயில் நிர்வாகத்தை மன்னர் குடும்பத்திடமும், பக்தர்களிடமும் ஒப்படைக்க வழி வகை செய்ய வேண்டும், மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்றி சபரி மலை ஐயப்பன் கோயில் நிர்வாகத்தை ஏற்று நடத்திட வேண்டும் என கோரிக்கை புகார் மனு அளித்துள்ளார்.

Leave your comments here...