கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாடும் ரஷ்யா.!

இந்தியாஉலகம்

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாடும் ரஷ்யா.!

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாடும் ரஷ்யா.!

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசிற்கு எதிராக தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகள், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.இதில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராச்சி நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாகவும், இதற்கு ஸ்புட்னிக்-v எனவும் பெயரிட்டுள்ளது.

அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கடந்த 11-ந் தேதி அறிவித்தார். இருப்பினும் இரண்டு கட்டமாக பரிசோதனை நடத்தியுள்ள ரஷ்யா 3-வது கட்ட பரிசோதனை நடத்தவில்லை.இந்த நிலையில் இந்த தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷியா நாடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது பற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷியா கேட்டிருக்கிறது. மேலும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தவும் கேட்டுள்ளது” என தெரிவித்தன.இந்த விவகாரத்தை கவனிக்கும்படி, உயிரி தொழில்நுட்ப துறையும், சுகாதார ஆராய்ச்சி துறையும் கவனிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. தடுப்பூசி குறித்த சில தகவல்களை ரஷியா பகிர்ந்துள்ளது. கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய ரஷியா அதிகாரபூர்வ கோரிக்கையை விடுத்துள்ளதா? என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷணிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர், “ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை பொறுத்தமட்டில், இந்தியாவும் ரஷியாவும் தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றன. இது தொடர்பான ஆரம்ப கட்ட தகவல்கள் பரிமாறப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தகவல்கள் வரவேண்டியதிருக்கிறது” என முடித்துக்கொண்டார்.

Leave your comments here...