நீட் தேர்வு எழுத வந்தே பாரத் மூலம் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியா வரலாம்..!
- August 25, 2020
- : 937
- NEET EXam

பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல் படிப்பு முடிப்பவர்கள், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய அளவில் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, மே மாதம் நடப்பதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, செப்., 13ல் நீட் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கொரோனா பாதிப்பால், அவர்களால் இந்தியா வந்து நீட் தேர்வை எழுத முடியாது. எனவே அவர்கள், நீட் தேர்வை எழுத தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் அல்லது கொரோனா பாதிப்பு சரியாகும் வரை நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், நீட் தேர்வை ஆன்லைனில் ஏன் நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையில், ஜே.இ.இ., தேர்வுகள் ஆன்லைனில் நடத்த வாயப்பு இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு, நீட் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்தது.மேலும், வெளிநாடுகளிலிருந்து நீட் தேர்வு எழுத இந்தியா வரும் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘மாணவர்கள் தேர்வுக்காக இந்தியா வர தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போதுமான விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. தேர்வு குறித்து குறிப்பிட்ட கால அளவிற்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்தியா வந்து தனிமைப்படுத்தி கொள்ள ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுவிட்டது’ என்றார்.
Leave your comments here...