ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு – சாலை போக்குவரத்து அமைச்சகம்

இந்தியா

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு – சாலை போக்குவரத்து அமைச்சகம்

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு – சாலை போக்குவரத்து அமைச்சகம்

மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலகெடு இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 ஆகியவற்றின் கீழ் உடற்தகுதி, அனுமதி, உரிமம், பதிவு அல்லது பிற ஆவணங்களின் செல்லுபடியாகும் காலக்கெடுவை டிசம்பர் 30, 2020 வரை நீட்டிக்க சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 தொடர்பான ஆவணங்களின் செல்லுபடியை நீட்டிப்பது தொடர்பாக இந்த ஆண்டு மார்ச் 30 மற்றும் ஜூன் 9ஆம் தேதிகளில் அமைச்சகம் முன்னதாக ஆலோசனைகளை வெளியிட்டது.

அதில் உடற்தகுதி, அனுமதி (அனைத்து வகைகளும்), உரிமம், பதிவுசெய்தல் அல்லது வேறு ஏதேனும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் செல்லுபடியாகும் காலக்கெடு செப்டம்பர் 30, 2020 வரை செல்லுபடியாகும் என்று கருதப்படலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் காரணமாகவும், தற்போதிருக்கும் மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டும், மேற்கூறிய அனைத்து ஆவணங்களுக்கான காலக்கெடு ஊரடங்கு காரணமாக மேலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 1, 2020 காலாவதியாகும் ஆவணங்கள் டிசம்பர் 31, 2020 க்குள் காலாவதியாகிவிடும் அனைத்து ஆவணங்களின் காலக்கெடுவுக்கும் இது பொருந்தும் .என்பதுடன் டிசம்பர் 31, 2020 வரை இது செல்லுபடியாகும். அத்தகைய ஆவணங்களை டிசம்பர் 31, 2020 வரை செல்லுபடியாகும் வகையில் செயல்படுத்த அமலாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave your comments here...