100 இந்திய வீரர்கள் 350 சீன வீரர்கள் : லடாக் எல்லையில் சீனாவை கதற விட்ட இந்திய ராணுவம்.! நடந்தது என்ன…?

Scroll Down To Discover

சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதத் தொடக்கத்தில் நடை பெற்றது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் இந்திய சீன எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது.இதனிடையே, இரு தரப்பைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இந்திய வீரர்கள் அங்கிருந்து திரும்பத் தொடங்கினர். ஆனால் சீன வீரர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பாமல் அங்கேயே இருந்தனர்.

மேலும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் தாங்கள் அமைந்திருந்த கண்காணிப்பு சாவடியை அகற்றுவதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.அது மட்டும் இன்றி அந்தப் பகுதியில் கூடுதல் ராணுவ வீரர்களை அவர்கள் குவிக்கத் தொடங்கினர். அதன்படி அங்கு 300 முதல் 350 சீன வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அதேசமயம் இந்தியா தரப்பில் 16வது பீகார் படைப்பிரிவை சிறந்த வீரர்கள் உட்பட 100 வீரர்கள் மட்டுமே இருந்தனர். இவர்களை 16வது பீகார் படைப்பிரிவின் தலைவர் சந்தோஷ் பாபு வழிநடத்தினார்.சந்தோஷ் பாபு தலைமையில் 50 வீரர்கள், சீன வீரர்களிடம் சென்று கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் கண்காணிப்பு சாவடியை அகற்ற வலியுறுத்தினார்.அப்போது இருதரப்பும் வீரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

தொடர்ந்து இந்திய வீரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற துவங்கியுள்ளனர். முன்னதாகவே தாக்குதலுக்கு திட்டமிட்ட சீன வீரர்கள், தயாராக வைத்திருந்த இரும்பு ராடு, கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.அவர்களின் முதல் தாக்குதல், ஹவில்தார் பழனி மீதும், ’16 பிஹாரி ரெஜிமென்ட்’ கமாண்டிங் அதிகாரி மீதும் தான் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த இந்திய வீரர்கள், சீன ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். சுமார் 350 சீன வீரர்களை, வெறும் 100 இந்திய வீரர்கள் புரட்டி எடுத்துள்ளனர். இந்திய வீரர்களும் கற்களை கொண்டு தாக்கி, அவர்களை நிலை குலைய வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமார் 3 மணி நேரம் நடந்த சண்டையில், சீன தரப்பிற்கு பலத்த அடி விழுந்துள்ளது. பலர் பலியாகி உள்ளனர். அசராத இந்திய வீரர்கள், குடில்கள், பிளக்ஸ்கள், பலகைகளை பிடிங்கி அப்புறப்படுத்தி உள்ளனர். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.