10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரன் கைது..!

Scroll Down To Discover

போதை பொருள் கடத்தலில் உள்ள முன்னணி நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. இந்நாட்டைச் சேர்ந்த பிரபல கடத்தல்காரன் டைரோ அன்டோனியோ உசுகா,53.

சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தான், 74 டன் போதை பொருளை அமெரிக்காவுக்கு கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

இவனை பற்றி தகவல் தருபவர்களுக்கு கொலம்பியா அரசு 80,0000 டாலர் பரிசுத்தொகை அறிவித்திருந்தது. அமெரிக்காவும் 5 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்திருந்தது. கொலம்பிய தேசிய பாதுகாப்புபடை போலீசாரால் 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தான்.

இந்நிலையில் கொலம்பியாவின் ஆன்டியோகியூவா மாகாணத்தில் உரேபா என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புபடை போலீசாருக்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 22 ஹெலிகாப்டர்கள் மூலம் 500 க்கும் மேற்பட்ட பாதுகாப்புபடை போலீசார் உசுகா பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.