திருச்சியிலுள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மணிகண்டன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டன் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு சால்வை அணிவிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, மணிகண்டன் பாஜக நிர்வாகி எனக் கூறி ட்விட்டரில் பதிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
https://twitter.com/HRajaBJP/status/1180392946622812160?s=19
ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது தான் அல்ல எனவும், திவாகரனுக்கு சால்வை அணிவிக்கும் புகைப்படத்தை தனக்கு அணிவிப்பது போல் மார்பிங் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாகவும் கூறி ஹெச்.ராஜா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Picture for :Hraja tweet
மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.கே.நகர் சயீத் என்பவரால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை திமுக தகவல் தொடர்பு பிரிவு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாகவும், அதனை திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா ரீட்வீட் செய்ததாகவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
எனவே ஆர்.கே.நகர் சயீத், திமுக தகவல் தொடர்பு பிரிவு, எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.