ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் தரிசனம்.!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீர் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக மதுரையிலிருந்து வந்த துணை முதலமைச்சருக்கு அதிமுக கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். ஓபிஎஸ் வருகையையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

தரிசனம் முடித்தபின் கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட துணை முதலமைச்சர், திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள செண்பகத்தோப்பில் உள்ள குல தெய்வக் கோவிலில், குலதெய்வம் வனப் பேச்சியம்மனை வணங்கினார். பேச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

குலதெய்வக் கோவிலில் துணை முதல்வர் சுவாமி தரிசனம் செய்தபின் அங்கிருந்து புறப்பட்டு செனறார். துணை முதல்வருடன் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.