ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் விசாரணை அறிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல்..!

Scroll Down To Discover

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகர வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்தன. இதில் சென்னை திநகரில் நடந்த பணியில் தரம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரைண அறிக்கை இன்று முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.