வைகை ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம், திருவேடகம் வைகை ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு பின்பு வாடிப்பட்டிதாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில், கருங்கல் சிலை பீடத்துடன் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ்க்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் கிராம பொதுமக்கள் ஆகியோர் வைகை ஆற்றுக்கு சென்று தண்ணீருக்குள் கிடந்த சிலையை கரைக்கு எடுத்து வந்தனர்.

கண்டெடுக்கப்பட்ட சிலை சுமார் 3 அடி உயரம் பீடத்துடன் கருங்கல்லால் இருந்தது. கையில் கிளியுடன் சிலை இருப்பதால், இதை மீனாட்சி அம்மன் சிலை என்று பக்தர்கள் தெரிவித்தனர். இந்த சிலையை, வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நவநீத கிருஷ்ணன் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ் ஒப்படைத்தார்.

செய்தி : ரவிசந்திரன்