வேளாண் நிலத்தில் காட்டு பன்றியால் பயிர்கள் சேதம் – நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங் குருணி கிராமத்தில் கிராமத்தில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது .

இதில் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் தட்டாம்பயறு, தக்காளி, நிலக்கடலை பயரிடப்பட்டுள்ளது.இதை நள்ளிரவில் புகுந்த காட்டு பன்றிகள் பயிர்களை கடித்து தின்று சேதமாகி நஷ்டத்தை ஏற்படுகின்றன.

இதனால், விவசாயி கார்திகேயனுக்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, வேளாண்மைத்துறை அதிகாரிகளோ, வனத்துறையினரோ விரைந்து நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என்றும் தற்போது, காட்டுப்பன்றிகள் விளைநிலத்தில் புகுந்து சேதப்படுத்தியதற்கு நஷ்டஈடு வழங்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.