வேளாண்மைதுறை சார்பில் விவசாயிகளுக்கு விதை நெல் விநியோகம்:.!

Scroll Down To Discover

முதல்போக சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வருகின்ற 4ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வேளாண்மை துறை சார்பில் பாசன விவசாயிகளுக்கு விதைநெல் விற்கப்பட்டு வருகிறது.

இதைதொடர்ந்து வாவிடமருதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் என்பவருக்கு வேளாண்மை துறை உதவி இயக்குனர் தனலட்சுமி விதைநெல் வழங்கினார். அருகில் , வேளாண்மை துறை உதவி இயக்குனர் வாசுகி, வேளாண்மை அலுவலர் ஆமினம்மாள், உதவி வேளாண்மை அலுவலர் ஈஸ்வரன், மற்றும் விவசாயிகள் உள்ளனர்.
செய்தி: Ravi Chandran