வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண் : 2மணிநேரத்தில் பெண்ணுக்கு அரசு பணி..!

Scroll Down To Discover

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி(28). இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர் எம்.ஏ. படித்துள்ளார்.

இவர், தனக்கு வேலை வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி வருகை தந்தபோது, தென்பாகம் காவல் நிலையம் அருகே மனு அளிப்பதற்காக நின்றுக்கொண்டிருந்தார்.

இதனை கவனித்த முதல்வர், அம்மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரும்படி அழைத்தார்.


மாரீஸ்வரியின் மனுவினை பரிசீலித்து 2 மணிநேரத்தில் பணி நியமன ஆணையினை முதல்வர் பழனிசாமி வழங்கினார். மாரீஸ்வரிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் புற ஆதார முறையில் வார்டு மேலாளர் பணி வழங்கி அதற்கான ஆணை வழங்கப்பட்டது.தனக்கு பணி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக மாற்றுத்திறனாளி மாரீஸ்வரி தெரிவித்தார்.