வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வேல்முருகன் கோவில் கும்பாபிஷேகம்..!

Scroll Down To Discover

மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வேல்முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி அருகே உள்ள வேலம்மாள் மருத்துவமனை மருத்துவமனை வளாகத்தில் வள்ளி தேவசேனா சமேத வேல் முருகன் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

வேலம்மாள் மருத்துவக் குழு தலைவர் முத்துராமலிங்கம் நிர்வாக இயக்குனர் கார்த்திக் மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.முன்னதாக, விக்னேஸ்வர பூஜை துவங்கி 4 கால யாக பூஜைகள் திருப்பரங்குன்றம் கோவில் ராஜா பட்டர் தலைமையில் சிவச்சாரியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், யாக சாலையிலிருந்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித கலசங்களை கோபுர விமானங்களில அபிஷேசம் செய்தனர்.மகாலட்சுமி, சரஸ்வதி, தன்வந்திரி, பைரவர் ஆஞ்சநேயர் நவகிரகங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பக்த்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

செய்தி : ரவிசந்திரன்