வேகமெடுக்கும் கொரோனா பரவல் – ரயில்கள் இயக்கம் சீராவதில் சிக்கல்

Scroll Down To Discover

கொரோனா பரவலால், கடந்தாண்டு மார்ச், 22 முதல், ரயில்களின் இயக்கம் முழுமையாக முடங்கியது. ஊரடங்கு தளர்வுகள்வழங்கப்பட்டாலும், சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.வரும், 2021 ஏப்., முதல், முன்பதிவில்லா மற்றும் அனைத்து ரயில் இயக்கத்துக்கு அனுமதி கொடுக்க, ரயில்வே அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், டில்லி மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகமெடுக்க துவங்கியுள்ளது. தமிழகத்திலும், இதன் பாதிப்பு எதிரொலித்துள்ளது.

ஓராண்டு இடைவெளிக்கு பின், அனைத்து ரயில்களின் இயக்கம் சீராகும் என, பயணியர்எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனா பரவல் வேகம், ரயில் இயக்கம் தொடர்பான அறிவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.