வெள்ளாளர் பெயரை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்:.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் பெரிய ஊர்சேரி, கல்லணை, வாடிப்பட்டி அல்கால்லூர் முடுவார்பட்டி, தேவசேரி உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு, வெள்ளாளர் பெயரை வேறு யாருக்கும் வழங்க ஆட்சேபித்தும், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, சோழவந்தான் எம். எல்.ஏ.மாணிக்கம், மற்றும் மத்திய அரசைக் கண்டித்து, பிள்ளைமார் சங்கத்தின் அலங்காநல்லூர் ஒன்றிய வ.உ.சி. பேரவைத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமயில் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில மகளிரணி தலைவி அன்னலெட்சுமி சகிலா கணேசன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் , 300- க்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.