வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க அச்சன்புதூரில் இணைய வழிப் போராட்டம்…!

Scroll Down To Discover

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசின் திட்டம் என்ன, பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் என்னென்ன என்பன குறித்த விவரங்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும், அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அச்சன்புதூர் கிளை சார்பில் மாபெரும் இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது.

இந்த இணைய வழிப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியும் வீட்டு வாசல்களிலும் வீடுகளின் மொட்டை மாடிகளிலும் வீடுகளின் காம்பவுண்டுக்கு உள்ளேயும் இருந்தபடி கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி போராடினர். அதை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி அதன் மூலம் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தங்களின் தமிழக மக்களை மீட்குமாறு குரல் கொடுத்துள்ளனர்.

இதில் அச்சன்புதூர் கிளை தலைவர் J சுலைமான், பொருளாளர்அப்துல் கனி, செயலாளர் மைதீன், துணைச் செயலாளர் செய்யது மசூது, துணைத் தலைவர் பஷீர் அலி, மாணவரணி சதாம் உசேன், மருத்துவ அணி முகைதீன் அல்தாஃபி, தொண்டரணி அலி ஆகியோர் கலந்து கொண்டனர்